×
 

நமக்கான சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்!! ஏழைக்கும் நீதி வேண்டும்! கவர்னர் ரவி அட்வைஸ்!

''நமக்கான சட்டங்களை நாமே புதிதாக உருவாக்க வேண்டும்,'' என, சட்ட பல்கலையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில், கவர்னர் ரவி பேசினார்.

இந்திய அரசியலமைப்பு தின விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கொடுத்த பேச்சு இப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை பெருங்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் நேரடியாகவே சட்ட மாணவர்களைப் பார்த்து, “நமக்கான சட்டங்களை நாமே புதிதாக உருவாக்க வேண்டும். 

78 வருஷம் சுதந்திர நாடாக இருந்தும் இன்னும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நீதிமன்ற தீர்ப்புகளைத்தான் பின்பற்றுறோம். இதை மாத்தணும்… இந்தப் பொறுப்பு உங்களுக்கு இருக்கு!” என்று அதிரடியாக பேசினார்.

கவர்னர் மேலும் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உண்மையான நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. சாதாரண மக்களுக்கு நீதி சென்று சேர வேண்டும். ஆனால் இன்றைய நீதிமன்ற வழக்காடு மொழி சாமானியர்களுக்கு ஒன்றுமே புரிய மாட்டேங்குது. அவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் வழக்காடு மொழியை மாற்ற வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: இனி டிலே ஆகாது!! கவர்னர் ஆர்.என்.ரவி மும்முரம்! 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல்!!

“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளில் இன்னும் வெளிநாட்டு நீதிமன்றங்களையே வழிகாட்டியாக வைத்திருக்கிறோம். இது மாற வேண்டும். நமக்கான தீர்வுகளை நாமே உருவாக்க வேண்டும். இந்தியாவுக்கான சட்ட நெறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு இன்றைய சட்ட மாணவர்களிடமும், நாளைய வழக்கறிஞர்களிடமும் இருக்கிறது” என்று கவர்னர் ரவி நேரடியாகவே சட்ட மாணவர்களைப் பார்த்துச் சொல்லி அசத்தினார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, “கவர்னர் சொல்வது 100% உண்மை”, “சட்டத்துறையில் புரட்சி வருமா?”, “சாமானியனுக்கு நீதி கிடைக்குமா?” என்று பலரும் விவாதித்து வருகின்றனர். கவர்னரின் இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதையும் படிங்க: அரசியல் அமைப்பு தினம்!! பார்லிமெண்டில் நடந்த கொண்டாட்டம்! முர்மு, மோடி பிரசண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share