×
 

80 தொகுதி நம்ம கையிலதான்! கெத்து காட்டும் விஜய்! தவெகவினருக்கு உற்சாகம் கொடுத்த ரகசிய சர்வே!

80 இடங்களில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இது சாத்தியமா? இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

சென்னை, டிசம்பர் 11: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் களத்தில் இறங்கியது முதல், தமிழக அரசியல் முழுவதும் பரபரப்பாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? என்ற கணிப்புகள் தொடர்ந்து வலம் வருகின்றன. அதில் சமீபத்திய அதிர்ச்சி தகவல்: “தவெகவுக்கு 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது” என்று கூறப்படும் ரகசிய சர்வேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தவெக தரப்பிலேயே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய சர்வேயில், விஜய்க்கு தமிழகத்தில் தற்போது 40 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சர்வேயின்படி, 2026 தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், தவெக தனித்துப் போட்டியிட்டால் 80 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, சோழிங்கநல்லூர், திருவள்ளூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கும், அதில் 60 சதவீதம் பெண் வாக்காளர்களின் ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவை மிரட்டிப் பார்க்கும் காங்.,! டெல்லி மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு!! தமிழக காங்., அதகளம்!

மற்றொரு ரகசிய சர்வேயில், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை ஆகிய மூன்று தொகுதிகளில் தவெக மிகப் பெரிய வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சியில் விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளமும், இளைஞர்கள், சிறுபான்மையினர் ஆதரவும் இருப்பதால் 60 சதவீத வாக்குகளை எளிதாகப் பெற முடியும் என்றும், விஜய் தானே திருச்சியில் நின்றால் தாக்கம் வேறு லெவலாக இருக்கும் என்றும் அந்தச் சர்வே கூறுவதாகத் தெரிகிறது.

கரூர் மாநாட்டில் ஏற்பட்ட சிறு சர்ச்சை இல்லாவிட்டால் இந்த வாக்கு விகிதம் இன்னும் உயர்ந்திருக்கும் என்றும், தற்போதைய நிலையிலேயே 80 தொகுதிகள் உறுதி என்றும் தவெக உட்புற வட்டாரங்கள் உற்சாகமாகப் பேசுகின்றன. “செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்க தலைவர்கள் வந்து சேர்ந்திருப்பதால், பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே 80 இடங்கள் என்றால், பிரச்சாரம் தொடங்கிய பிறகு எண்ணிக்கை மேலும் உயரும்” என்று தவெகவினர் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசியல் நிபுணர்களும் விமர்சகர்களும் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. “80 தொகுதிகள் என்பது மிக மிக அதீதமான கணிப்பு. ஒரு இடத்தைக் கூட ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. விஜய் நிச்சயம் வாக்குகளைச் சிதறடிப்பார், குறிப்பாக தி.மு.க.,வின் வாக்குகளைப் பிரிப்பார். ஆனால், அது வெற்றியாக மாறுமா என்பது பெரிய கேள்விக்குறி” என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில், விஜய்யின் வருகை தமிழக அரசியலை முழுமையாகக் குலுக்கி வருகிறது. 80 தொகுதிகள் உண்மையில் சாத்தியமா? அல்லது வெறும் கனவா? என்பதற்கு இன்னும் ஒரு வருடம் கழித்து நடக்கும் தேர்தலே பதில் சொல்லும்.

இதையும் படிங்க: கோபி வேணாம்!! கோவைல வச்சிக்கலாம்!! எடப்பாடியை பழிதீர்க்க செங்கோட்டையன் மாஸ்டர் ப்ளான்!! தவெக மும்முரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share