×
 

திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

தனது வார்த்தைகளால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனக்கும் வருத்தம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தேவையானால் தனது வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகள் தொடர்பாக தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிசா கால நிகழ்வுகள் மற்றும் அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டதாக கூறப்படும் தியாகம் குறித்த விவகாரம் அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பேச்சு ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தினர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது ஆ.ராசா தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆ.ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை! சகிக்க முடியவில்லை! திமுகவின் பேச்சுக்கு எதிராக சண்முகம் கொந்தளிப்பு!!

அந்த பதிவில், தியாகத்தின் மூலம் உருவான ஒரு தலைவரின் அடையாளத்தையும் உண்மையையும் திட்டமிட்டு பொய்யாகவும் ஏளனமாகவும் சித்தரித்ததால் ஏற்பட்ட வலியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, சம்பந்தப்பட்டவரின் அடையாளம் மற்றும் உண்மை குறித்து உணர்ச்சி வேகத்தில் கேள்வி எழுப்பியதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

மேலும், தனது வார்த்தைகளால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனக்கும் வருத்தம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தேவையானால் தனது வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்ற கடுமையான வாசகத்தையும் தனது பதிவில் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது விளக்கம் ஒருபுறம் சமரச தொனியிலும், மறுபுறம் அரசியல் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

விஜய்யின் சட்டமன்ற பேச்சு, திமுகவின் எதிர்ப்பு, சைதாப்பேட்டை போராட்டம், ஆ.ராசாவின் சர்ச்சை கருத்து என அடுத்தடுத்து உருவாகியுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் விளக்கத்துக்கு விஜய் தரப்பு மற்றும் பிற அரசியல் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்கப் போகின்றன என்பது அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share