×
 
☰

உருவகேலி சர்ச்சை!! மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கணும்! திமுக, அதிமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அமைதியாக இருப்பதாக ஆதவ் அர்ஜூனா விமர்சித்தார். பெண்கள் தொடர்பான இத்தகைய கருத்துகளை அரசியல் கட்சிகள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்டாலின் பேசியது உருவகேலி செய்யும் வகையில் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அக்கட்சியின் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் உடனடியாக சத்யபாமாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோது, தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து பேசினார். அப்போது அவரை “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என்று குறிப்பிட்டதுடன், அவரது உடல் தோற்றத்தை குறிப்பிட்டு பல்டி அடிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு தொடர்பான வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பெண்களை இழிவுபடுத்தும் எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். சத்யபாமா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு ஒவ்வொரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அமைதியாக இருப்பதாக ஆதவ் அர்ஜூனா விமர்சித்தார். பெண்கள் தொடர்பான இத்தகைய கருத்துகளை அரசியல் கட்சிகள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளைத் தொடரக் கூடாது என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது. தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைவர்களின் பேச்சுகளும் அதற்கு எதிரான விமர்சனங்களும் தேர்தல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஸ்டாலின் பேச்சு தொடர்பாக திமுக தரப்பில் இதுவரை விரிவான பதில் வெளியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனை!! மதுராந்தகம், தாராபுரம் தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் போட்ட திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share