டைம் பாஸுக்கு அரசியலுக்கு வராதீங்க - தவெக தலைவர் விஜய்க்கு நடிகை ரோஜா அட்வைஸ்...!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் மாதிரி.. நம் பின்னால் வரும் ஜனங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும் என நடிகை ரோஜா அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகையும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர்கள் விஜய், பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்தார்.
“பவன் கல்யாண் வந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீகம் சுற்றுலா வராரு. ஆன்மீகம் பத்தி அவ்வளவு பேசுறாங்க, ஆனா தப்பு பண்ணவகள அரெஸ்ட் பண்ணமாட்டாங்க. ஒரு நாள் பார்த்தால் ஹைதராபாத்தில் ஷூட்டிங்குல ரிலாக்ஸா இருப்பாரு. இன்னிக்கு தமிழ்நாடு வந்தாரு நாளைக்கு கர்நாடகாக்கு போவாரு அவருக்கு வந்து டைம் பாஸ் டைம் பாஸ் பாலிடிக்ஸ் பண்றாரு. அவர் ஒரு சீரியஸ் பொலிட்டிசியன் கிடையாது” என சகட்டுமேனிக்கு சாடினார்.
எம்.ஜி.ஆர். கூட ஆர்டிஸ்ட் தான், ஆனா அவர் எப்படி அரசியலில் வேலை பார்த்தார் என பார்த்திருப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ரெண்டு பேரும் சினிமா ஸ்டாராக இருந்தாலும், அவங்க அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி மட்டுமே யோசித்தார்கள். ஆனா இப்போ சினிமாவுல இருந்து வர்றவங்க டைம் பாஸ் பாலிடிக்ஸ் பண்றாங்க. அவங்க மேல இருக்குற கிரேஸை பயன்படுத்தி சும்மா ஜனங்களை ஏமாத்துறாங்க. இது தப்பு. நீங்க நல்லது செய்யணும்னா முழுக்க முழுக்க அரசியலுக்கு வாங்க, உங்க முழு நேரத்தையும் மக்களுக்காக கொடுங்க. மக்களோட கஷ்டத்தை தெரிஞ்சிக்கோங்க என்றார்.
இதையும் படிங்க: அய்யோ பாவம்... “விஜய்கிட்ட போயா”... பாஜகவுக்கு இப்படியொரு பரிதாப நிலையா? - கலாய்த்த காங்கிரஸ் எம்.பி...!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயாக இருந்தாலும் தனது கருத்து இதேதான் எனக்கூறிய ரோஜா, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வரும் போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வர வேண்டும் என்றார். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கி அதன்பின் திடீரென அதை கொண்டு போய் காங்கிரசில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவங்க ரோட்டில் நிற்கிறாங்க. நம் பின்னால் வரும் ஜனங்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் fight பண்ணவேண்டும். இடையில் எல்லாம் போக கூடாது. தொண்டர்களை ரோட்டில் விட்டுவிட்டு போக கூடாது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்யை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே... கிண்டலடித்த அமைச்சர் கே.என்.நேரு!!