கரூர் கணக்கு...! இன்னும் இருக்கு... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆதவ் அர்ஜுனா..!!
தவெகவில் அதிமுகவினர் இணைந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூரில் எங்களுக்கு கணக்கு வழக்கு இருக்கிறது என்று தெரிவித்தார். அதை முடிக்காமல் விட மாட்டோம் என்றும் அங்கே நடந்தது என்ன என்பது விஜயபாஸ்கருக்கு எல்லாம் தெரியும் எனவும் தெரிவித்தார். சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!
மேலும், ரவுடி கட்டுப்பாட்டில் உள்ள கரூரை மீட்க வேண்டும் என்றும் கூறினார். அரசியலில் வெற்றி முக்கியம், தேர்தல் அரசியல் முக்கியம். தேர்தல் அரசியல் தெரிந்த நிர்வாகிகள் இணைப்பு தேவை என்று கூறியுள்ள அவர், தமிழ்நாட்டை உருவாக்க அடித்தளம் கொண்ட உறுதியாக கட்சி வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி தான் அதிமுகவினர் இணைகின்றனர் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!