பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!
அதிமுக -5பாஜக தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் டிராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல்.
இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.
ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொடரும் இழுபறி..! தொகுதி பங்கீட்டு பஞ்சாயத்தை முடிக்க டெல்லிக்கு பறந்த EPS..!!
பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இழுப்பறியாக இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை பாஜக அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கேள்வி கேட்கும் பெண்களை "கூலிப்படை " வைத்து துன்புறுத்தும் திமுக..!! ஆதாரத்தோடு விளாசிய அதிமுக..!!