“அவர் என்ன எம்ஜிஆரா? பிடிஆர் தானே?”... மதுரை மைந்தருக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த சுந்தர் சி...!
இந்த பகுதி மக்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் எங்கள் எம்எல்ஏ வை ( அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை) பார்த்ததே இல்லை என்று சொல்கிறார்கள்.
என்.டி.ஏ. கூட்டணி மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் நடிகர் சுந்தர் சி பேசியதாவது: புரட்சித்தலைவர் ரசிகர் நான். புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மாவால் வழிநடத்தப்பட்டு இன்று புரட்சித்தமிழர் இபிஎஸ் அவர்களால் போற்றி பாதுகாக்கப்படும் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்த பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.
நான் திரைப்படங்களில் நிறைய பேய் காட்டி இருக்கிறேன். திரையரங்கில் நிறைய கூட்டத்தை காட்டி இருக்கிறேன். வசூலை காட்டியிருக்கிறேன். ஆனால் இன்றுதான் பேய் கூட்டம் என்றால் என்னவென்று பார்க்கிறேன். புரட்சித்தலைவர் அரசியல் வந்த நேரத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை அப்போது இருந்த அரசாங்கம் ஏற்படுத்தியது .
ஆனால் அப்போது எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக செயல்வீரர்களாக செயல்பட்டனர்.
அதுபோன்ற செயல்வீரர்களால் தான் அதிமுக தொடர்ந்து இயங்கி வருகிறது. நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று சொன்னவுடன் அவரை எதிர்த்து அந்த தொகுதியிலா என்றனர். ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்ஜிஆரா?. பி டி ஆர் தானே.. ஒரு கை பாத்துடலாம். திமுக கூட்டணியில் பில்டிங் மட்டும் தான் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்.
இதையும் படிங்க: மதுரை பிள்ளையை வெல்வாரா கோவை மா 'பிள்ளை'..? சுந்தர்.சியை இறக்கி மத்தியில் சாதி அரசியல்..!
நான் வெளியூரிலிருந்து வந்தவன் என்று கூறுகிறார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தார்கள் ?. இந்த பகுதி மக்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் எங்கள் எம்எல்ஏ வை ( அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை) பார்த்ததே இல்லை என்று சொல்கிறார்கள். என்னைப் பற்றி இப்போது அவதூறு பரப்ப தொடங்கி விட்டனர். என் மனைவி கூட இங்கே இருக்கிறாங்க. நான் ஒரு வாரத்துக்கு ஆறு நாள் கறிசோறு இல்லாமல் சாப்பிட மாட்டேன். ஆனால் நான் கறிக்கடையை மூடுவேன் என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். நான் ஜெயித்த உடன் உங்கள் அனைவருக்கும் கறி விருந்து போடுகிறேன் என்றார்.
இதையும் படிங்க: என்னது ஓட்டுக்கு காசா..?? அப்ப இந்த லிஸ்ட்ட நோட் பண்ணுங்க..!! நாதகவின் அசத்தல் விழிப்புணர்வு..!!