×
 

சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் அண்ணா சிலைக்கு போகும்  படிக்கட்டு துணிகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அந்த துணிகளை அகற்றிவிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செங்கோடு அதிமுக  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம்.டி சேகருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர், அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற அவர், சிலைக்கு செல்லும் படிக்கட்டுகள் துணிகள் கொண்டு  மூடப்பட்டிருந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் துணிகளை அகற்றிவிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அறிவித்துள்ளார்.

அந்த வேட்பாளர் பட்டியலில் திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது மூன்று பேர் போட்டியில் இருந்தார்கள். அதில் எஸ் ஆர் எம் டி சேகர் என்கின்ற சந்திரசேகர் திருச்செங்கோடு தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்  .

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...!! - இலையை கபளீகரம் செய்யும் தாமரை... இபிஎஸுக்கு வந்த அதிர்ச்சி செய்தி...!

சென்னையில் இருந்து இன்று காலை திருச்செங்கோடு வந்த வேட்பாளர் எஸ் ஆர் எம் டி சேகருக்கு திருச்செங்கோடு வட்டாரத்தின் எல்லையான காளிப்பட்டியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து இன்று 11.30 மணி அளவில் திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதிக்கு வந்து அண்ணா சிலைக்கு  எஸ்.ஆர்.எம்.டி சேகர் மாலை அணிவித்து தனது பணியை தொடங்கினார்.

அதிமுகவினர் ஒன்று திரண்டு வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது முன்னதாக திருச்செங்கோடு நகராட்சி சார்பில் அண்ணா சிலைக்கு போகும்  படிக்கட்டு துணிகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் அந்த துணிகளை அகற்றிவிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

இதையும் படிங்க: அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share