திடீர் ட்விஸ்ட்...!! - இலையை கபளீகரம் செய்யும் தாமரை... இபிஎஸுக்கு வந்த அதிர்ச்சி செய்தி...!
தாமரை சின்னத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டி: ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் யார் என்பதை நாளை அறிவிப்பேன்
நெல்லை பாளையங்கோட்டை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல் அதன் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொதுத் தொகுதியான ராஜபாளையம் தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியதாக கூறப்படுகிறது.
வாக்கெடுப்பு முடிந்ததும் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர். இதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
இதையும் படிங்க: அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!
செயல்வீரர்கள் கூட்டம் இந்திய ஜனநாயக முறைப்படி யார் அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக நிற்க வேண்டும் என்று ஓட்டெடுப்பு நடத்தி இருக்கிறோம். அதன் அடிப்படையில் நாளை வேட்பாளரை அறிவிப்போம். தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். 3 மூன்று பேர் கொடுத்துள்ளார்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது.
இதுவரை புது தொகுதி எங்களுக்கு கிடைத்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் எங்களுக்கு பொதுத் தொகுதி கொடுத்துள்ளார்கள். அனைத்து ஜாதி சமுதாய மக்களையும் அரவணைத்து செல்கின்ற ஒரு வாய்ப்பு தொகுதி கிடைத்திருக்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியோடு இருக்கிறோம்.
அதிருப்தி எல்லா கட்சியிலும் இருக்கிறது. அது நியாயமானது தான் இருக்கும் தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். அதை மீறி செயல்படுபவர்கள் கட்சிக்கு விரோதமானவர்கள்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்து அவரிடம் தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதை தான் நான் கூற முடியும். நாளை நெல்லை வரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பேன் மகிழ்ச்சி என்று கூறினார்.
இதையும் படிங்க: கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!