×
 

மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு... அசத்தல் அறிவிப்புகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி..!

செங்கல் சூளை தொழிலாளிகளுக்கு தடை இல்லாமல் வண்டல் மண் கிடைப்பதற்கு அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலூர் மாவட்டம்   கணியம்பாடி  பகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியமும் இணைந்த இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி.விவசாய பெருங்குடி மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். விவசாயம் கடுமையான பணி நான் விவசாயியாக இருப்பதால் அதனுடைய கஷ்டம் அனைத்தையும் நான் அறிந்திருக்கின்றேன். இன்றைக்கும் நான் விவசாயம்தான் செய்து கொண்டிருக்கின்றேன்

செங்கல் சூளை தொழிலாளிகளுக்கு தடை இல்லாமல் வண்டல் மண் கிடைப்பதற்கு அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அமிர்தி ஊராட்சியில் உள்ள நாகநதி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்படும். அதிமுக அரசு அரசு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 உள் ஒதுக்கீடு கொண்டு வந்து 2818 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறோம்.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு திமுக அரசு சம்பளம் முழுமையாக வழங்கவில்லை. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்திய அரசிடம் போராடி வாதாடி பணத்தை பெற்று கொடுத்திருக்கிறோம். மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

இதையும் படிங்க: மக்களை பாதுகாக்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல.. திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அடுத்த ஆண்டு உங்களால் மலர்கின்ற பொழுது, பொங்கலன்று தரமான சேலை வேட்டி முன்கூட்டியே வழங்கப்படும். தீபாவளி அன்று பெண்களுக்கு அற்புதமான சேலைகள் வழங்கப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது அதிமுக ஆட்சிதான்! இபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share