×
 

“தவெகவில் உனக்கு கொய்யாப்பழம் கூட கிடைக்காது... டெபாசிட் போய் திரும்ப இங்க தான் வரணும்...” - நிர்மல் குமாரை வச்சி செஞ்ச கே.டி.ராஜேந்திர பாலாஜி...!

பைத்தியம் பிடித்து பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியுமா?, கருணாநிதி உள்ளிட்ட  யார் யாரெல்லாமமோ அழிக்க முயற்சித்தும் அழிக்க முடியாத அதிமுகவை விஜய் வந்து அழித்து விட முடியுமா?.

பைத்தியம் பிடித்துப் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது  சட்டமன்றத் தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என தவெக இணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பேசியது பற்றி அதிமுக  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்

சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்பாக   முன்னாள் அமைச்சரும், சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  சட்டமன்றத்தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சி இருக்காது என தவெக இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, பைத்தியம் பிடித்து பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியுமா?, கருணாநிதி உள்ளிட்ட  யார் யாரெல்லாமமோ அழிக்க முயற்சித்தும் அழிக்க முடியாத அதிமுகவை விஜய் வந்து அழித்து விட முடியுமா?. அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின்  மாநில இணைச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் தவெகவில் ஏதாவது கிடைக்குமா? என்று நினைத்து சென்றுள்ளார்.

தவெகவில் நிர்மல் குமாருக்கு எதுமே கிடைக்காது. கொய்யாப்பழம் கூட கிடைக்காது. தவெகவிற்கு செல்லும் எல்லோருக்கும் எதுமே கிடைக்காது. சென்றவர்களெல்லாம் மீண்டும் அவரவர் இருந்த இடத்திற்கே வருவார்கள். நிர்மல் குமார் எவ்வளவு  வேகமாக மீண்டும் அதிமுகவிற்கு வருவார் என்று பாருங்கள். நிர்மல்குமார் எனது நண்பர்தான், அவர் தவெகவில்  இருப்பதால் அப்படி பேசி வருகிறார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நிர்மல் குமார் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது.

இதையும் படிங்க: கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

தவெக வேட்பாளர்கள் அனைவரும்  இன்ஸ்டாகிராமில்தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை சந்திக்கும் திறமையும், தகுதியும் தவெகவி னர்  யாருக்கும் கிடையாது. தவெகவில் ஒரு சில அரசியல் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள் மட்டும் மரியாதையான வாக்குகள் வாங்குவார்கள்.  மற்றபடி 98 சதவீதம் வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்வார்கள்.

திமுகவுக்கும், தவெகவுக்கும் போட்டி என விஜய் சொல்வதை, பங்குனி- சித்திரை மாதங்களின்  வெயிலால் பித்து பிடித்து போய் பேசுவதாக மக்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் பலம் கொண்ட திமுகவையே அடித்து பலமாகி ஆட்சியைப் பிடித்த கட்சி அதிமுக. 32 -ஆண்டுகள் நாடாண்ட கட்சி அதிமுக. திமுகவையே காலி செய்து வளர்ந்த கட்சி அதிமுக.  போட்டி என்றால் அது  அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டுமே.களத்தில் வேறு யாருக்கும் வேலையே கிடையாது.

வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு தினத்தன்று (ஏப்ரல் 23ம் தேதி) காலை 11- மணிக்கு மேல் தவெகவில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் அரசியல் செய்து கொண்டு நாங்கள் தான்- நாங்கள் தான் என தவளை போல் கத்தினால் ஒன்றும் ஆகாது. வீணா போன கட்சியிலிருந்து சீட்டு வாங்கியவர்கள் வீணாகப் போகப் போகிறார்கள். போட்டி திமுக- அதிமுகவிற்கு மட்டுமே. வீண் பேச்சு பேசிக் கொண்டு கதை அளக்கின்ற திமுக பெரிய கட்சியா? திமுக ஆட்சியில் எல்லாமே நடிப்பும், நாடகமும் மட்டுமே. அதிமுக ஆட்சி என்பது பொற்காலம்.


திமுக ஆட்சியில் கடன் வாங்கியது மட்டுமே மிச்சம். தமிழக மக்களை கடனாளியாக்கியதுடன் தமிழக மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி மலர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டு மென்ற நிலைப்பாட்டோடு மக்கள் இருக்கிறார்கள். விரக்தியின் விளிம்பில் திமுகவும், தவெக போன்ற எங்களை எதிர்க்கின்ற கட்சிகள் புலம்புகின்றன. அதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் நடைபெறும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் வேட்பாளர் தேர்வு குறித்து ராகுல் காந்தி டென்ஷனாகி வேட்பாளர் பட்டியலை கிழித்து விட்டதாக செய்தி வருகின்றன.  விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்மாணிக்கம்தாகூர் காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிலையில்  அதிமுகவிற்கு தான் அவர் வேலை செய்யப் போகிறார். மாணிக்கம் தாகூரின் எம். பி. யின்  ஆதரவு எங்களுக்கு வேண்டும்.  சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எங்களை எதிர்த்தால், எம்.பி மாணிக்கம் தாகூர் எங்களுக்கு ஆதரவு தருவார். கோஷ்டிக்குப்பஞ்ச மில்லாத காங்கிரஸ் கட்சியில் நான்கு கோஷ்டியாகிவிட்டது காங்கிரஸ் வேட்பாளரை இந்த மாதம் அறிவிக்க மாட்டார்கள்.அடுத்த( மே)மாதம் 5-ம் தேதி அறிவிப்பார்கள்.  அதுவரை பொறுமையாக இருந்து பாருங்கள். என கிண்டலாக காங்கிரஸ் கட்சியை ப்பற்றி விமர்சித்தார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்... குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்க வாய்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share