தம்பி விஜய் மாங்காய் பறிக்க போய் இருந்தீங்களா?.... செதில், செதிலா உலுக்கிடுவோம்... சி.எம்.மை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்...!
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை, கொரோனா , பேரிடர் காலங்களில் எங்கு போனீர்கள் மாங்காய் பறிக்க போனீர்களா என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சரமாரி கேள்வி
மதுரையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சர் விஜயை சரமாரியாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது: தற்போது எந்த உழைப்பும் கொடுக்காமல் எந்த போராட்டத்தை முன் எடுக்காமல் தேர்தல் களத்தை சந்தித்து தம்பி விஜய் அதிகாரத்துக்கு வந்ததோடு இப்போது வானத்திற்கு பூமிக்கும் குதிக்கிறீர்கள். இந்த தமிழ்நாட்டு மக்களிடத்திலே நீங்கள் தந்திட்ட உழைப்பு , போராட்ட களத்தை ஒரே ஒருமுறை பட்டியல் சொல்லுங்களேன்இந்த மக்களுக்கு.
நீங்க நேற்று கூட்டத்தில் இன்னும் கொஞ்சம் ஆதரித்திருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமே அப்படின்னு சொன்னீங்கள். கஜா புயல் வந்தது, சுனாமி வந்தது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது அப்போது நீங்கள் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தீர்களா
இந்த தமிழ்நாட்டு மக்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு யார் உழைச்சா? நீங்க களத்துல இறங்கி தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் பாதுகாப்பு அரணை. உருவாக்கி கொடுத்தீர்களா விஜி தம்பி
முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற சட்ட போராட்டங்களில் உரிமையை மீட்க பாடுபட்டீர்களா தமிழ்நாடு மக்களுக்கு நீங்கள் என்னதான் வழி காட்டினீர்கள். சிறு வயது முதல் சினிமா திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் தனியாக விமானத்தில் பயணம் செய்வதில் உங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டீர்கள். இதனால் தமிழ்நாடு மக்களுக்கு நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள். உங்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை.
இதையும் படிங்க: ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!
திருச்சியில் நன்றி அறிவிப்பு வந்தீங்க, சரி உங்களுக்கெல்லாம் மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள் சரி, திருச்சியில் தமிழகம் வளர்ச்சிக்கு என்ன செய்தி சொன்னீர்கள். மேகதாது பிரச்சனை உள்ளது, பயிர் கடன் பிரச்சினைகளில் விவசாயிகள் போராட்ட களத்தில் உள்ளார்கள், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது, மின்சார தடை இருக்குது, போதை பொருள் நடமாட்டம் உள்ளது. இதையெல்லாம் 25 நாளில் சீர் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.
ஆனால் தமிழகத்தில் பிரச்சனை இருக்கிறது அதற்கு நான் தீர்வு காண என்ன திட்டம் வைத்துள்ளேன். எனக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கு நான் என்ன பாதுகாப்பு கொடுத்து இருக்கிறேன். என்ன செய்யப் போறேன். அதையாவது சொல்ல வேண்டாமா?
இன்னும் நடிகராகவே இருந்து தமிழ்நாட்டு மக்களிடத்தில் நடித்துக் கொண்டே இருந்தால் தம்பி விஜய் நீங்க எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறிங்க அதிமுகவை கிள்ளி கீரையாக நினைத்து நீங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவீர்கள் எடப்பாடியாரிடம் கவர்ச்சி இல்லை என்று நீங்கள் எதையும் பேசி விடலாம் என்று நினைக்கிறீர்கள்
அண்ணா திமுகவை அழிக்க நினைக்கிறீங்க உங்கள் ஆணவம் பேச்சு மூலம் தெரியுது தம்பி. அண்ணா திமுகவை விஜய் தம்பி இன்னும் அசிங்கப்படுத்துங்க, எங்களை கேவலப்படுத்துங்க, எங்களை உதாசீனப்படுத்துங்க, எங்கள் அவமானப்படுத்துங்கள் அப்பத்தான் அண்ணா திமுகவின் சிங்க கூட்டம சிலிர்த்து எழும், அது உங்களை செதில்,செதிலாக உலுக்கும் காலம் வரும். அதிமுக பெயரை உச்சரிக்காமல் மற்றும் பலர் என்று அவதார புருஷன் போல பேசியது ஒரு நடிகர் மூலம் வரும் விளம்பரம் எங்களுக்கு தேவை இல்லை என பேசினார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!