×
 

விடிந்ததுமே பேரதிர்ச்சி...!! - உச்சக்கட்ட கோபத்துடன் முதலமைச்சர் விஜயை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி...!

தூத்துக்குடியில் இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி கடுமையாக சாடியுள்ளார். 

தூத்துக்குடியில் இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர்  திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை... இளம்பெண்ணை சீரழித்த தவெக நிர்வாகிகள் கைது...!


நடந்தது என்ன? 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் இளம் பெண்ணை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share