“விஜய் அண்ணாவிற்கு இது மட்டும் நல்லா தெரியும்...” - தமிழக முதல்வரை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
சட்டம் - ஒழுங்கை சரி செய்ய தவெக அரசு கால அவகாசம் கேட்டதற்கு முதலமைச்சர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை நான் இப்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. எதுவும் தெரியாது ஆனால் மக்களை ஏமாற்ற விஜய் அண்ணாவிற்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விஜய் அண்ணா ஆட்சியில் இன்னும் தமிழகத்தில் என்னென்ன நடக்கப் போகிறது என்று தனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது காலம்தான் இதற்கு நல்ல தீர்வை சொல்ல வேண்டும் .
பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் ஸ்ரீநாத். ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ யார் என்று தெரியாது எம்எல்ஏக்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் யாருன்னு தெரியாது தொகுதி எதுன்னு தெரியாது என்ன ஒரு மாற்றம் பாருங்க.
இதையும் படிங்க: "இரும்புக்கரம் கொண்டு எப்ப அடக்குவீங்க விஜய் அங்கிள்..." - சி.எம். விஜயை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!
தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் அனுபவம் தெரியாது வரலாறு தெரியாது, போராட்டமும் தெரியாது ,தியாகம் தெரியாது ,பிரச்சனைகளும் தெரியாது, நிர்வாகம் தெரியாது, தொகுதியும் தெரியாது ,தொகுதி மக்களையும் தெரியாது, தொகுதி மக்களுடைய உரிமையும் தெரியாது , மக்களுடைய எதிர்பார்ப்பும் தெரியாது ,ஆளுமையும் தெரியாது ,அதிகாரமும் தெரியாது, அரவணைப்பும். தெரியாது.
தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை நான் இப்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே எதுவுமே தெரியாது. ஆனால் மக்களை ஏமாற்றம் மட்டும் தெரியும். விஜய் அண்ணா உங்கள் தலைமையிலே தமிழ்நாட்டின் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்பது நமக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது காலம் தான் இதற்கு பதில் சொல்லும். காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும் அதுவரை நாம் பொறுமையோடு தான் இதை கடந்து செல்ல வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் மாங்காய் பறிக்க போய் இருந்தீங்களா?.... செதில், செதிலா உலுக்கிடுவோம்... சி.எம்.மை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்...!