×
 

"விரைவில் ஒரு விரல் புரட்சி வெடிக்கும்"... விஜய் ஸ்டைலில் திமுகவை எச்சரித்த செல்லூர் ராஜூ...!

இந்த நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.மதுரையில் சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளது மதுரை மக்கள் சாகசத்தோடு தான் பயணம் செய்கிறார்கள்.

மருதுபாண்டியர்களின் 224 நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தியாகிகளுக்கு நினைவு மண்டபம் சிலை மற்றும் நினைவு மண்டபம் கட்டியது அதிமுக அரசு.திமுக பேச்சுக்காக ஒட்டுக்காக நாடகமாடுவார்களே தவிர உள்அன்போடு மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செய்லது கிடையாது.அவர்களுக்கு நினைவுக்கு வருவது எல்லாம் கருணாநிதி பெயர் தான். 200கோடி ருபாய் செவில் கலைஞர் பெயரில் நூலகம் அமைத்து உள்ளனர். இந்த நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு எந்த திட்டமும் செய்யவில்லை.மதுரையில் சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளது மதுரை மக்கள் சாகசத்தோடு தான் பயணம் செய்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் மேயர் முதல் மண்டல தலைவர்கள் இல்லை.மதுரை மாநகராட்சி ஊழல் மாநகராட்சியாக உள்ளது. வரி விதிப்பில் 200 கோடி ருபாய் ஊழல் நடந்து உள்ளது என கூறி நீதிமன்றம் டிஜஜி தாலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது. ஓராண்டாக அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிக்கு சென்று போட்டோ ஷுட் எடுத்து வருகிறார்கள்,நேரடியாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பது கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள் வரும் தேர்தலில் ஒரு விரல் புரட்சி முலம் மக்கள் திமுவை தோற்கடிப்பார்கள். மாநகராட்சியில் 69 உறுப்பினர்கள் இருந்த போதிலும் மேயரை தேர்தெடுக்க முடியாத அரசாக உள்ளது என்றார்.

இதையும் படிங்க: பூங்கா அமைக்க எதிர்ப்பு... செல்லூர் ராஜூவை சூழ்ந்த பெண்கள்... மதுரையில் சர்ச்சை...!

முல்லை பெரியாறு அணையில் 136 அடியிலிந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என நீதிமன்றம் முலம் உத்தரவு பெற்று தந்தவர் ஜெயலலிதா .பென்னிகுக்கிற்கு நினைவு மண்டபம் கட்டியது அதிமுக.ஆனால் திமுக உச்சநீதிமன்ற உத்தரவை 5 ஆண்டுகள் கிடப்பில் போட்டது.கேரளா அரசு புதிய அணை கட்டுவதாக தெரிவித்து உள்ளது. ஆனால் அணை கட்ட கூடாது என திமுக கேரளா அரசிற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அப்படி ஒரு நிலை வந்தால் ஜந்து மாவட்ட மக்களும் கொந்தளிப்பார்கள் என்றார்.

இந்த ஒரு விரல் புரட்சி என்ற வார்த்தை விஜய் நடித்த சர்கார் படத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “தவெக கொடியை தூக்கி காட்டும் அளவுக்கு அதிமுககாரன் இழி பிறவி இல்ல” - செல்லூர் ராஜூ ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share