மகனுக்கு ரூ.100 கோடியில் பிரம்மாண்ட திருமணம்... திமுக அமைச்சருக்கு ஜெயில் உறுதி... அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜு...!
திமுக அமைச்சர்கள் மதுரைக்கு 2 பேர் இருந்தும் நலத்திட்ட பணிகள் செய்யவில்லை வளமான துறையை பெற்று மூர்த்தி மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளார்.
குடிநீர் பற்றாக்குறை மதுரை மாவட்டத்தில் அதிகம் இருந்தது மதுரைக்கு இருந்த ஒரே குடிநீர் ஆதாரம் வைகை மட்டுமே ஆதனால் அங்கு குடிநீரை சேமிக்க வேண்டி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் ஆலோசனை கேட்டு பின்பு தான் தெர்மோகோல் விட்டேன் பின்னர் என்னை அதிகம் விமர்சித்தனர் நான் என்ன செய்வது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட காந்தி சிலை மண்டபத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: நான் கடந்த மூன்று முறை இப்பகுதியில் போட்டியிட்டு 10 ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றியுள்ளேன். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 14 வது இடத்தில் இருந்தேன் அம்மா என்னை நேரில் அழைத்து கூட்டுறவுத் துறை கொடுத்து 5 வது இடத்திற்கு முன்னேற்றினார்.
நான் அமைச்சராக இருந்த போது எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் மதுரையின் வளர்ச்சிக்கு பாடுபட்டேன். குடிநீர் பற்றாக்குறை மதுரை மாவட்டத்தில் அதிகம் இருந்தது மதுரைக்கு இருந்த ஒரே குடிநீர் ஆதாரம் வைகை மட்டுமே ஆதனால் அங்கு குடிநீரை சேமிக்க வேண்டி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் ஆலோசனை கேட்டு பின்பு தான் தெர்மோகோல் விட்டேன் பின்னர் என்னை அதிகம் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா?... அசிங்கப்பட்ட செல்லூர் ராஜூ ... ஆசை ஆசையாய் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
நான் அமைச்சராக இருந்த போது மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் நல்லது செய்தேன் ஆனால் தற்போது மேற்கு தொகுதி சட்டன்ற உறுப்பினராக இருக்கும் எனது வீட்டருகே கூட சாலை வசதி அமைத்து தர திமுக அமைச்சர் புறக்கணித்து விட்டார். எனது தொகுதியில் பொறுப்பு அமைச்சராக செயல்படும் திமுக அமைச்சர் பி.மூர்த்தி செயல்பட்டு பரவை பேரூராட்சி அதிமுக சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். அதிகாரிகளிடம் உத்தரவிட்டு பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருகின்றார்.
எந்த பணியும் செய்யாமல் பணி செய்தது போல் போலியாக நிதி செலவழித்து வருகின்றனர் நிச்சயம் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் தணிக்கை செய்யப்பட்டு முறைகேடு உறுதியானால் சிறைக்கு அனுப்புவோம். திமுக அமைச்சர்கள் மதுரைக்கு 2 பேர் இருந்தும் நலத்திட்ட பணிகள் செய்யவில்லை வளமான துறையை பெற்று மூர்த்தி மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளார்.
மகனுக்கு 100 கோடி செலவழித்து பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைக்கிறார். சொந்த மாக திருமண மண்டபத்தை திறந்து வைக்கிறார்.நிச்சயம் இடி ரெய்டு மூர்த்திக்கு வரும். அவர் சிறை செல்வது உறுதி. இந்த காந்தி சிலை திறப்பில் ஊழல் பற்றி நான் பேசுகின்றேன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்
இதையும் படிங்க: நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்ஷன்...!