×
 

தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

அரசு பொறுப்பேற்று 116 நாட்கள் கடந்துள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது உள்ளிட்ட தவறுகளுக்கான ஆதாரங்களை திமுக வெளியிடும்.

“ரியல் ஆட்சி இல்லை; ரீல் ஆட்சி – 5 ஆண்டுகள் தவெக அரசு தொடர்ந்தால் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் – மின்வெட்டு, டாஸ்மாக் முறைகேடு குறித்து அரசு நடவடிக்கை இல்லை” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யை கண்டித்து, கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பதாகை  ஏந்தி  கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக தலைவர்கள் மீது விமர்சனங்களையும், வசனங்களையும் முன்வைத்தாரே தவிர, ஆக்கப்பூர்வமான பதில் எதையும் கூறவில்லை என விமர்சித்தார்.

மேலும், இது ரியல் ஆட்சியாக இல்லாமல் ரீல் ஆட்சியாக இருப்பதாகவும் திமுக மீது நடவடிக்கை எடுப்பதற்காக மூன்று கோப்புகள் தயாராக இருப்பதாக கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததை கூறியுள்ளார், திமுக மீது எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், அரசு பொறுப்பேற்று 116 நாட்கள் கடந்துள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது உள்ளிட்ட தவறுகளுக்கான ஆதாரங்களை திமுக வெளியிடும்.

மின்வெட்டு பிரச்சினையை பொறுத்தவரை, அரசு முழுமையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தவில்லை, சீரான மின் விநியோகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படாத அரசாக இருப்பதாகவும், அதை வழிநடத்தும் முதலமைச்சர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படுகிறார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.20 வரை வசூலிக்கப்படுவதாகவும், இதை தாம் கூறவில்லை என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

கரூருக்கு முதலமைச்சர் விஜய் வந்து பாடல் பாடியதாக குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, அந்தப் பாடலுக்கு என்ன பாடுவார்கள். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் , முதியோர் உதவித்தொகை பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் அடுத்த அரசியல் களம் எது? ஸ்டாலின் கொடுத்த முக்கிய ஆஃபர்!! என்ன தெரியுமா??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share