"சூதானமா இருங்க... செத்து போயிட்டதா சொல்லிடுவாங்க..." - அதிமுகவினரை அலர்ட் செய்த தங்கமணி...!
திமுகவை பொருத்தவரை அந்த அதிகாரிகளோடு செல்லும்போது நமது அண்ணா திமுக வாக்குகளை வெளியூருக்கு சென்று விட்டார்கள், இறந்து விட்டார்கள் எனக் கூறி விடுவார்கள்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஊஞ்சபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பூத் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் அதிமுக கழக பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் பூத் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்டு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: திமுகவை பொருத்தவரை அந்த அதிகாரிகளோடு செல்லும்போது நமது அண்ணா திமுக வாக்குகளை வெளியூருக்கு சென்று விட்டார்கள், இறந்து விட்டார்கள் எனக் கூறி விடுவார்கள். ஆகையால் அதிகாரிகளோடு நீங்களும் சென்று வீடு வீடாக அந்த படிவத்தை கொடுக்கும் போது உடன் இருங்கள்.
அதேபோன்று திமுக வாக்காளர்கள் இறந்து போனவர்கள் இருந்தால் சொல்ல மாட்டார்கள் நீங்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுங்கள் அவர்கள் உயிருடன் இல்லை என்றால் இல்லை என்ற உண்மையை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். இதை நாம் சரியாக செய்து விட்டோம் என்றால் 50 சதவீதம் தேர்தல் பணி முடிந்து விட்டது.
இதையும் படிங்க: "இப்படி பண்ண மிஸ்ஸே ஆகாது"... SIR படிவத்தை சரியா பூர்த்தி செய்ய தங்கமணி கொடுத்த சூப்பர் ஐடியா...!
ஒரு தொகுதியைப் பொறுத்தவரை பத்திலிருந்து 15 சதவீதம் இந்த சிறப்பு வாக்காளர் திருத்த முறையில் இறந்து போனவர்கள் வெளியூருக்கு சென்றவர்கள் அடையாளம் தெரியாதவர்கள் என 10 முதல் 15 சதவீதம் வாக்குகள் குறைந்து விடும். இதை வைத்து திருட்டு ஓட்டு போடும் முறையை இல்லாமல் பண்ணுவதற்காக தான் தேர்தல் ஆணையம் இந்த பணியினை செய்துள்ளது. இதற்கு நாம் முழு ஒத்துழைப்போடு இருந்து செய்ய வேண்டும். அதை வைத்து தான் திமுகவினர் திருட்டு ஒட்டு போட்டுக் கொண்டிருந்தனர்.
அதற்கு வாய்ப்பு இல்லாமல் தேர்தல் ஆணையம் பண்ணுவதால் தான் அதை எதிர்த்து திமுக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். அதற்காகத்தான் திமுக கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரக் கூடாது எனவும் வலியுறுத்துகிறது. நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளது. நாமும் நீதிமன்றத்திற்கு செல்வோம் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என நீதிமன்றத்திற்கு போவோம். இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. என கூறினார்.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 174 தொகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அந்தக் கூட்டம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் கூட்டமாகும். மக்கள் முடிவு செய்து விட்டனர் எனக் கூறினார்.
இதையும் படிங்க: "இப்படி பண்ண மிஸ்ஸே ஆகாது"... SIR படிவத்தை சரியா பூர்த்தி செய்ய தங்கமணி கொடுத்த சூப்பர் ஐடியா...!