×
 

அடேங்கப்பா...!! படையப்பா பட கிளைமேக்ஸை கண் முன் காட்டிய விஜயபாஸ்கர்... 200 பேருந்துகள், 500 கார்களா..!!

அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த இணைப்பு விழாவில், முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாமல்லபுரம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்துகள் மூலம் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இந்த இணைப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர்,  எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.அனந்தன் ஆகியோருடன், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மாவட்டச் செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ள உள்ளனர். இதற்காகவே இந்த பிரம்மாண்ட இணைப்பு விழா மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவெகவில் இணைய வரும் அதிமுகவினரை வரவேற்கும் விதமாக காலையிலேயே சுட சுட உணவு பரிமாறப்பட்டு வருகிறது. இட்லி, பொங்கல், சாம்பார், வடை என நூற்றுக்கணக்கானோருக்கு தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மக்களின் நம்பிக்கையாக முதல்வர் விஜய்... த.வெ.க-வில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share