“திமுகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் விரும்பினார்...” - உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...!
என்னை முதலமைச்சராக தேர்வு செய்ய திமுக ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என எடப்பாடி பழனிசாமி கேட்டார். அதனைக் கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 100 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவிற்குச் சென்றது. இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தார். இதனை சரி செய்ய முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றதாக கூறப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்றே தொங்கும் சட்டசபை அமையும் என கணித்த எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்து தனக்கு ஆதரவு தரும் படி கேட்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சரும் சி.வி.சண்முகம் அதிமுக உட்கட்சி ஆலோசனை கூட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். அந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.
தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்த போது அதிமுக பொதுச்செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்தே அதிமுக தொடங்கப்பட்டது. 53 ஆண்டு காலமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். என்னை முதலமைச்சராக தேர்வு செய்ய திமுக ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என எடப்பாடி பழனிசாமி கேட்டார். அதனைக் கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை என்பதை எடுத்துரைத்தோம்.
இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!
திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். இது தவறு, இது வேண்டாம் என நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் அதனை ஒத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனக்கூறியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!