×
 

அரக்கோணத்தில் பரபரப்பு... அதிமுக எம்.எல்.ஏ போலீசாரால் குண்டுக்கட்டாக கைது... காரணம் என்ன?

அரக்கோணத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தப்படும் என்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி உட்பட அதிமுகவினர் குண்டு கட்டாக கைது

வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி நடத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் வேஷ்டி–சேலை விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது. 2026இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, “சட்டசபையிலேயே இந்த குற்றச்சாட்டுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளேன். ஆண்டுதோறும் என்ன செய்து வருகிறோம்? என்பதையும் தெளிவாகச் சொல்லி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி மனநிலை சரியில்லாதவர் போல பேசி வருகிறார்” என்றார்.

அமைச்சர் ஆர்.காந்தியின் பேச்சைக் கண்டிக்கும் வகையில் இன்று, அதிமுக சார்பில் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வெடித்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி உட்பட 200-க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். 

இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி... பாஜக தலைமைக்கு பேரதிர்ச்சி...!

இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share