×
 

கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாரம்.. செங்கோட்டையன் முன்னிலையில் வழக்கறிஞர் அணி தவெகவில் ஐக்கியம்..!

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக திருப்பூரில் வழக்கறிஞர் அணியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக எதிர்க்கட்சியாக மாறியது. ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்து அதிமுக அதன் நிலையை இழந்தது. இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்தபோது அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இபிஎஸ் அணி, வேலுமணி அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது அதிமுக. ஏற்கனவே பல பிரிவுகளை பார்த்து வந்த நிலையில் மீண்டும் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டு இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 

திருப்பூர் அதிமுக வழக்கறிஞர் அணியினர் 30 பேர் கட்சியிலிருந்து விலகி உள்ளனர். திருப்பூர் மாநகர் அதிமுக வழக்கறிஞர் அணியினர் 30க்கும் மேற்பட்டவர்கள் கூண்டோடு விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளனர். இதில் அரசு முன்னாள் வழக்கறிஞர் முருகேசன் உட்பட 30 வழக்கறிஞர்கள் கூண்டோடு விலகி தங்களை தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் இணைகின்றனர்.

ஏற்கனவே அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ்சரவணன் ,மாநகர் மாவட்ட கழக இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்திரசேகர், கே.பி.ஜி. மகேஷ், பொங்கலூர் மேற்குஒன்றிய கழக செயலாளர் உகாயனூர் பழனிசாமி ஆகியோர் அதிமுக கழகத்தில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க: முடிவை மாற்றிக் கொண்டாரா கே.சி. வீரமணி..? அதிமுகவில் வெடிக்கும் பிரளயம்..!!

இந்த நிலையில் மேலும் அதிமுக வழக்கறிஞர் அணியினர் 30 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கின்றனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு கட்சியின் மீதான நம்பிக்கையை குறைத்து வருகிறது. இதன் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் அதிமுக என்ற கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதுகின்றனர்.

இதையும் படிங்க: அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share