×
 

“இது அதிமுகவோட கோட்டை...” - பாஜக மேடைக்கு கீழ் இருந்து அதிமுக தொண்டர் கொடுத்த ரிப்ளே... ஷாக்கான அமர் பிரசாத் ரெட்டி...!

தமிழ்நாடு அதிமுகவின் கோட்டை என்று குரல் கொடுத்த அதிமுக தொண்டருக்கு இந்தியா மோடியின் கோட்டை என்று பதிலளித்த அமர்நாத் ரெட்டி

இந்த மைக்கு கூட திமுக தலைவர் ஸ்டாலின் போல சரியா வேலை  செய்ய மாட்டேங்குது என தொடங்கி மைக்கை சரி செய்ய முயன்ற பாஜக நிர்வாகியிடம் சரி செய்ய முடியாது ஸ்டாலினை எப்படி சரி செய்ய முடியாதோ அதுபோல இந்த மைக்கையும் சரி செய்ய முடியாது.  ஐயா இது அதிமுகவின் கோட்டை என மேடைக்கு கீழிருந்து வந்த அதிமுக தொண்டரின் குரலுக்கு தமிழ்நாடே அதிமுகவின் கோட்டை  ஒத்துக்கொள்கிறோம் என கூறிவிட்டு பாரத் மாதாகி ஜே என கோஷம் எழுப்பி விட்டு ஆனால் இந்தியா பிரதமர் மோடியின் கோட்டை என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கர் செய்த மைக்கை வைத்து நீண்ட நகைச்சுவை செய்த பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டியால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி -வைகை அணை சாலை பிரிவு பகுதியில் பாஜகவின் பட்ஜத்ட் மற்றும் நரேந்திர மோடியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி கலந்துகொண்டு முதலில் பேச முயன்ற போது  அவரது கையில் எடுக்கப்பட்ட மைக் பிரச்சனை செய்தது உடனே அமர் பிரசாத் ரெட்டி அதிலிருந்து நகைச்சுவையாக பேச ஆரம்பித்தார். 

திமுக தலைவர் ஸ்டாலின் போலவே இந்த மைக்கு கூட மக்கர் செய்து கொண்டே இருக்கிறது என பேசியவர், தொடர்ந்து அந்த மைக்கை சரி செய்ய வந்த பாஜக நிர்வாகியிடம் சரி செய்ய முடியாது. ஸ்டாலினை எப்படி சரி செய்ய முடியாதோ அதே போல இந்த மைக்கையும் சரி செய்ய முடியாது என்றார். அப்போது மேடைக்கு கீழிருந்து அதிமுக தொண்டர் ஒருவர் “ஐயா இது அதிமுகவின் கோட்டை இங்கு ஒன்றும் செய்ய முடியாது” எனக்கூறினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

அதற்கு தமிழ்நாடே அதிமுகவின் கோட்டை தான் ஒத்துக்கொள்கிறோம் என கூறிவிட்டு தொடர்ந்து பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பிவிட்டு, ஆனால் இந்தியா பிரதமர் மோடியின் கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம் என வசனம் பேசிய அமர் பிரசாத் ரெட்டியால்  மேடைக்கு கீழிருந்து அதிமுக, பாஜக தொண்டர்கள் மற்றும் மேடைக்கு மேலிருந்த நிர்வாகிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். 

 

 

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி..! பேரவையில் உரக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share