×
 

பீகார் மாடலில் ஸ்கெட்ச்! பழனிசாமி பின்னால் RSS தலைவர்கள்! அதிமுக, பாஜகவின் அடுத்த மூவ்!

மெகா கூட்டணி அமைத்து, அக்கட்சிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றினால், திமுக ஆட்சியை அகற்றி விடலாம் என்று அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பழனிசாமியிடம் எடுத்து பேசி இருக்கின்றனர்.

சென்னை வானகரத்தில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்வுக்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில் நடக்கும் இந்தக் கூட்டம் வழக்கமான ஆண்டுக் கூட்டமாக இல்லாமல், “மெகா கூட்டணி” உருவாக்கத்திற்கான முக்கிய மேடையாக மாற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் ஆர்எஸ்எஸ்-ன் மூத்த தலைவர்கள் இருவர் சென்னை வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். அப்போது பீகார் தேர்தல் முடிவுகளை உதாரணமாக வைத்து அவர்கள் பேசினர். “பீகாரில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் போன்ற எதிரெதிர் துருவங்களையே ஒன்றிணைத்து என்டிஏ இமாலய வெற்றி பெற்றது. 

தமிழகத்திலும் அதே போல் அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பிரிந்து சென்ற OPS, டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றோரையும் இணைத்தால் திமுகவை வீழ்த்த முடியும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: "இப்படி பண்ண மிஸ்ஸே ஆகாது"... SIR படிவத்தை சரியா பூர்த்தி செய்ய தங்கமணி கொடுத்த சூப்பர் ஐடியா...!

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர்களை என்டிஏ கூட்டணியில் சேர்ப்பதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது.

செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலர்கள் கலந்து பேசி, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்” என்று தெளிவாகக் கூறிவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே டிசம்பர் 10-ம் தேதி அவசரமாக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “இந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கியத் தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

அவர்கள் திரும்பினால் பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவையும் தானாக கூட்டணியில் வந்து சேரும். தொண்டர்களிடையே ‘ஆட்சியைப் பிடிக்கலாம்’ என்ற நம்பிக்கை பிறக்கும். மெகா கூட்டணி அமைந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் உள்ளது” என்றனர்.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் 2026 தேர்வின் போக்கையே தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share