பணி நியமன முறைகேடு! அமைச்சர் நேருவுக்கு சிக்கல்! அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் அதிமுக எம்.பி!!
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் (MAWS Department) ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) கடந்த 2025 அக்டோபரில் தமிழக டி.ஜி.பி.க்கு 232 பக்க ஆவணங்களுடன் கடிதம் அனுப்பியது.
இதில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும், டெண்டர்களில் 7.5-10% கமிஷன் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இத்துறை அமைச்சர் கே.என். நேரு பொறுப்பு வகிக்கிறார்.
இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை மற்றும் மதுரை ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து, "அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உறுதியான உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி நீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பில் வழக்கறிஞர் எஸ். தமிழ்செல்வன் ஆஜராகி, "நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கை எடுக்கவில்லை" என முறையிட்டார்.
நீதிபதிகள், "தனி அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என கூறினர். உடனடியாக இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of Court) தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளவை:
- நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி பிப்ரவரி 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பினேன். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
- அரசியல் செல்வாக்கால் அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழலை மறைக்க முயற்சி நடக்கிறது.
- லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் (பொறுப்பு) ஏ.டி. துரைகுமார் உள்ளிட்ட அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
- நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை உறுதி செய்ய வேண்டும்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதிமுக தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!