×
 

“அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், தமிழகத்தில் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரையிலான சர்வதேசத் தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

அதேபோல், தமிழக இளைஞர்களிடம் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சியும் போட்டி வாய்ப்புகளும் வழங்குவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்கவும் இந்த நகரம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விளையாட்டுச் சுற்றுலாவும் மேம்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் கொண்டவருமான அஜித்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை விளையாட்டுத் துறையை நோக்கி ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தமிழகத்தில் பிரத்யேகமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அஜித்குமார் கூறியுள்ளார்.

மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸில் தற்போது ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி, “தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என்று குறிப்பிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அஜித்குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

இதையும் படிங்க: ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share