×
 

இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்து: மோடி-டிரம்ப் உறவு குறித்து முக்கிய தகவல்!!

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்க உள்ள எதிர்காலத்தை அமெரிக்கா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்திய மக்களுக்கு அமெரிக்கா சார்பில் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சார்பில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறிய மார்கோ ரூபியோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான தனிப்பட்ட உறவு இரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு 100% வரி?! டிரம்பு கையில் அதிகாரம்? அமெரிக்க செனட்டில் அதிரடி மசோதா! புதிய நெருக்கடி

மேலும், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, கனிம வளங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி போன்ற எதிர்காலத்தை தீர்மானிக்கும் துறைகளில் இந்தியா-அமெரிக்கா கூட்டணி மீது இரு நாடுகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு அரசியல் மற்றும் வர்த்தகத்தை மட்டுமின்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்பு மற்றும் தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான நட்புறவு, புதுமையான மற்றும் எதிர்காலத்திலும் வலுவான கூட்டாண்மைக்கு அடித்தளமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்க உள்ள எதிர்காலத்தை அமெரிக்கா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தில் அமெரிக்கா தெரிவித்துள்ள இந்த வாழ்த்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share