×
 

யாரை நம்பியும் பாஜக கிடையாது!! ஒரு பய வாலாட்ட முடியாது! அமித் ஷா மாஸ் ரிப்ளை!

''மஹாராஷ்டிராவில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை; சொந்த பலத்தில் கட்சி இயங்குகிறது,'' என, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வை யாரும் நம்பி இல்லை, சொந்த பலத்தில் கட்சி இயங்குகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மும்பையில் புதிய பா.ஜ., தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர் பேசினார். "குடும்ப அரசியல் இனி செயல்படாது. செயல்திறன் கொண்ட அரசியலே நாட்டை முன்னேற்றும்" எனவும் கூறினார். 

மும்பை சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே 55,000 சதுர அடியில் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகம், கூட்டரங்கு, 400 பேர் அமரும் அரங்கம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதைத் திறந்து வைத்து அமித் ஷா பேசியதாவது:

“குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகளின் அரசியல் இனி இந்தியாவில் செயல்படாது. செயல்திறன் கொண்ட அரசியலே நாட்டை முன்னேற்றும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த உதாரணம். டீ விற்ற ஏழை குடும்பத்தில் பிறந்தவர், அர்ப்பணிப்பு, தியாகம், விடாமுயற்சி மூலம் நாட்டின் பிரதமரானார்.”

இதையும் படிங்க: கண்ணகி நகரை உலக அரங்குக்கு கொண்டு போகணும்! தங்கமகள் கார்த்திக் இபிஎஸ் நேரில் வாழ்த்து...!

“மஹாராஷ்டிராவில் யாரையும் நம்பி பா.ஜ., இல்லை. சொந்த பலத்தில் கட்சி இயங்குகிறது. நான்காவது இடத்தில் இருந்தோம். இப்போது 'நம்பர் 1' கட்சியாக உருவெடுத்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற வேண்டும். பைனாக்குலரில் பார்த்தாலும் எதிர்க்கட்சிகள் தெரியக்கூடாது – அவர்களை தேர்தலில் துடைத்தெறிய வேண்டும்!”

“தன் சொந்த கட்சியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாத கட்சி, தேசத்தின் ஜனநாயகத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இது வாரிசு அரசியல் நம்பும் அனைத்து கட்சிகளுக்கும் வலுவான செய்தி.”

“புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க 'ஆப்ரேஷன் சிந்துார், ஆப்ரேஷன் மஹாதேவ்' மூலம் நிரூபித்தோம். எல்லையில் யாரும் வாலாட்ட முடியாது என எதிரிகளுக்கு காட்டினோம்.” என்றார்.

மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - என்.சி.பி., கூட்டணி ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் இறுதியில் நடக்க உள்ளது. அமித் ஷாவின் இந்தப் பேச்சு, பா.ஜ.,வின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா போறீங்களா?! வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை! டிச.,26 முதல் அமல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share