×
 

கலாசாரத்துக்கு அச்சுறுத்தல்!! ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் காங்.,! வெளுத்து வாங்கும் அமித் ஷா!

''அசாம் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரர்களை காங்கிரஸ், தங்களின் ஓட்டு வங்கியாக பார்த்தது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நகோன் (அசாம்): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் மாநிலம் நகோனில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அசாம் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் கட்சி தனது ஓட்டு வங்கியாகப் பார்த்ததாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

அமித் ஷா பேசுகையில், “நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் அனைவரையும் வெளியேற்றுவது என்று பாஜக உறுதிபூண்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் அசாமில் இருப்பது சரியானதா?

ஊடுருவல்காரர்களை அப்புறப்படுத்திய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை பாராட்டுகிறேன். அவர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பல ஆண்டுகள் அசாமை ஆண்டாலும் அசாம் மக்களுக்காகவோ போராடியவர்களுக்காகவோ எதுவும் செய்யவில்லை” என்றார்.

இதையும் படிங்க: மோடி சாதாரண ஆள் கிடையாது!! 'நமோத்சவ்' நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்ட உண்மை தகவல்கள்!

மேலும், “அசாம் மக்கள், நிலம், கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் ஓட்டு வங்கியாகப் பார்த்தது. அசாம் மட்டுமல்ல, நாடு முழுவதும் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை பாஜக அரசு கண்டறியும். பிரதமர் மோடி அசாம் மக்களின் கலாசார அடையாளத்தையும் மாநில வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டுள்ளார்.

அசாமை ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற இன்னொரு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்” என்று அமித் ஷா வலியுறுத்தினார்.

அசாம் மாநிலத்தில் ஊடுருவல் பிரச்சினை நீண்டகாலமாக விவாதப் பொருளாக உள்ளது. பாஜக அரசு இதைத் தீர்க்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறி வருகிறது. அமித் ஷாவின் இந்தப் பேச்சு அசாம் அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜய், ஸ்டாலின் கனவு பலிக்காது? யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share