பார்லிக்கு வர சொன்னா பாரீன் ஓடுறீங்களே? அப்புறம் எப்பிடி பேசுவீங்க! ராகுல்காந்தியை வச்சு செய்த அமித்ஷா!
மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை நேரடியாகவே விமர்சித்தது லோக்சபாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாக விமர்சித்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் முடிவில், அமித் ஷா பேசியபோது, ராகுல் காந்தியின் பாராளுமன்ற வருகை மிகக் குறைவு என்றும், முக்கிய விவாதங்கள் நடக்கும்போது வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அமித் ஷா கூறியதாவது: “சபாநாயகரின் முடிவு இறுதியானது. அவரது நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இந்த தீர்மானம் சபாநாயகரை இழிவுபடுத்துவதாக உள்ளது. எதிர்க்கட்சிகள் விதிகளை இஷ்டத்துக்கு வளைக்கின்றன. ராகுல் காந்தி பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஜெர்மனி, இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிடுகிறார்.
ஜனாதிபதி உரைக்கு கூட வரவில்லை. பதிவேட்டின்படி அவரது வருகை மிகக் குறைவு – 17வது லோக்சபாவில் 51%, 16வது லோக்சபாவில் 52%, 15வது லோக்சபாவில் 43% மட்டுமே. தேசிய சராசரியை விட குறைவு. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம், பட்ஜெட் விவாதங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் இருந்தபடி எப்படி பேச முடியும்? வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி உண்டா?”
இதையும் படிங்க: அமித்ஷா குறித்த தேதி!! அசைன்மெண்ட் முடிச்சாகணும்!! மார்ச் 31-க்குள் நக்சல்கள் ஒழிக்கும் பணி தீவிரம்!
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமித் ஷாவிடம் மன்னிப்பு கோரி முழக்கமிட்டனர். ராகுல் காந்தி பதிலடி கொடுத்து, “ஒவ்வொரு முறையும் நான் பேச எழுந்தால் சபாநாயகரால் தடுக்கப்படுகிறேன்.
அடிப்படை கேள்விகளைத்தான் எழுப்பினேன். முன்னாள் ராணுவத் தளபதி நரவனே, எப்ஸ்டீன் விவகாரம் போன்றவற்றை பேச முயன்றேன். ஆனால் தடுக்கப்பட்டேன். எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவது வரலாற்றில் முதல்முறை” என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் ஓட்டெடுப்பால் தோற்கடிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் பக்கம் ஆளும் கட்சி உறுதியாக நின்றது. இந்த விவாதம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி – ஆளும் கட்சி இடையேயான மோதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் வருகை மற்றும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க: சீட்டு கேட்டு டெல்லி வராதீங்க!! சிபாரிசு ஸ்ட்ரிக்ட்லி நோ!! பாஜக தலைமை கொடுத்த வார்னிங்!