×
 

அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்த அமித் ஷா... பாஜக கூட்டணியில் புது ட்விஸ்ட்...!

 பாஜக கூட்டணையில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பதில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய சூழலில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றது. தமிழகத்தில் இரண்டு அணிகளாக போட்டிடுவார்களா? அல்லது மூன்றாவது அணி உருவாகுமா? என்ற கேள்விகள் இருந்து வரக்கூடிய நிலையில் தமிழக வெற்றி கழகம் அதாவது நடிகர் விஜய் பாஜாக கூட்டணியில் இணைவாரா எண்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , “சில காலம் பொறுத்திருங்கள், தேர்தலுக்கு முன்னதாக தெளிவான பதில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கக்கூடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். தமிழகத்தினுடைய ஆட்சியினுடைய நிலை மற்றும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய அந்த கூட்டணி கட்சிகளுடைய நிலை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். அதில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று தெளிவுபட தெரிவித்திருக்கக்கூடிய அவர், உங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?  என்ற கேள்விக்கும் பதிலளித்திருக்கின்றார். குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, “தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும்” என குறிப்பிட்டிருக்கிறார். 

தேர்தலை முன்னிட்டு உங்கள் கட்சியிலே திரைப்பட நடிகர்களை மேலும் சேர்க்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, “அதை பற்றி உள்ளூர் அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். விஜயுடனான  கூட்டணி குறித்து அமித் ஷா இல்லை எனக்கூறிவில்லை. இன்னும் சில காலம் பொறுத்திருங்கள் நிச்சயமாக தெளிவு கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே அந்த கட்சியினுடைய தமிழக வெற்றி கழகத்தினுடைய பொருளாளர் வெங்கட்ராமன் பாஜகவோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரான அருண்ராஜ் அவர் பாஜக பின்பலம் கொண்டவர், அவரும் தவெகவை பாஜகவுடன் இணைக்க பாடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: மக்களோடு விஜய்.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்! வரும் 4ல் கூடுகிறது தவெக செயற்குழு கூட்டம்..!

இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share