தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்... எடப்பாடி தலையில் இடியை இறக்கிய அமித் ஷா...!
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்திற்கான பாஜகவின் தேர்தல் வியூகத்தை கோடிட்டுக் காட்டினார். முக்கிய கூட்டணி கட்சியான அதிமுகவின் பங்களிப்பு குறித்து விரிவாக பேசியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் வாய்ப்புகள் குறித்து டைம்ஸ் நெட்வொர்க் குழுமத்தின் தலைமை ஆசிரியர் நவிக்கா குமார் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் பாஜகவிற்கு அமைப்பு ரீதியிலான பலம் இன்னும் குறைவாகவே இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்.
தமிழ்நாட்டில் எங்களுடைய கட்சி பணி குறைவாக உள்ளது என குறிப்பிட்டுக் கூறிய அவர், அதனால் தான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அண்ணா திமுகவுடன் கூட்டனி வைத்துள்ளதாகவும், அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கூட்டணியின் “பதே பாய்” (பெரிய அண்ணன்) மற்றும் முதன்மைக் கூட்டாளி என்று வர்ணித்த அமித் ஷா, அதனுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்று உள்துறை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், பரந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வியூகத்தின் ஒரு பகுதியாக, பாஜக சிறிய பிராந்தியக் கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.
அதேசமயத்தில் திமுகவிற்கு மக்கள் மீதான அதிருப்தி குறித்து பேசிய அமித் ஷா, "மாநிலத்தில் திமுகவுக்கு எதிராகப் பெரும் ஆட்சி எதிர்ப்பு அலை நிலவுவதை நான் காண்கிறேன். அவர்கள் வெறுப்பு அரசியலைப் பரப்பி வருகின்றனர். அதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி "வலுவான பெரும்பான்மையுடன்" ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி என்ற வரலாறு கிடையாது. அதிமுக தான் அமைச்சரவை அமைக்கும், எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வருவார் என அதிமுக தரப்பில் பல முறை வலியுறுத்தி கூறப்பட்டாலும், தொடர்ந்து பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என பேசி வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!