×
 

NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வைக்கக்கூடிய அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில ஈடுபட்டிருந்தார். இந்த ஆலோசனையின் நிறைவாக அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை என்பது நிறைவு பெற்றது. 

இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில்   தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவடைந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரு சில தொகுதிகளில்  போட்டியிடுவதற்கு தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பாஜக தரப்பில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகள் என்ற பெயரில் ஏற்கனவே 50 தொகுதிகளுக்கு மேலே பட்டியல் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அதில் சில தொகுதிகள் அதிமுக நிர்வாகிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளாக இருப்பதால் அந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

இந்த நிலைதான் நேற்றைய பேச்சு வார்த்தைக்கு பிறகாக முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. குறிப்பா பாஜக வழங்கி இருக்கக்கூடிய தொகுதிகளான ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராயநகர், திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, தளி, ஆலங்குளம், தென்காசி, சிங்காநல்லூர், புன்னூர், வால்பாறை, அந்தியூர், தாராபுரம், திருப்பூர் மேற்கு, அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, பழனி, நாகர்கோவில், விளவங்கோடு, காரைக்குடி, மொடக்குறிச்சி மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளில் அடங்கிய பட்டியல் என்பது வழங்கப்பட்டிருந்த சூழ்நிலையில், அதில் சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டிருப்பதாகவும், தொகுதி பங்கீடு என்பது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: திமுகவில் ஓபிஎஸ்... கடும் அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்..!!

எனவே இன்று காலை 10.45 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இறுதி செய்யப்பட்டுள்ள தொகுதி பட்டியல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த இறுதி ஒப்பந்தம் வந்து மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களில் இருக்கக்கூடிய நிலையில முதலில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடை அதிமுக இறுதி செய்கிறது. அதனை தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடை இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: செம்ம வைரல்...!! - இபிஎஸ் வாயை வாடகைக்கு எடுத்த திமுக ஐ.டி. விங்... தீயாய் பரவும் தேர்தல் பிரசார வீடியோ....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share