அதிமுகவின் அடிமடியில் கைவைத்த அமித் ஷா... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி...!
அதிமுகவிடம் அமித் ஷா சார்பில் கொடுக்கப்பட்ட முதற்கட்ட விருப்ப தொகுதி பட்டியலைப் பார்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயங்கர ஷாக்கில் இருக்கிறாராம்.
அதிமுகவிடம் அமித் ஷா சார்பில் கொடுக்கப்பட்ட முதற்கட்ட விருப்ப தொகுதி பட்டியலைப் பார்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயங்கர ஷாக்கில் இருக்கிறாராம்.
சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த பாஜகவுடைய பூத் கமிட்டி மாநாட்டுக்கு வந்த அமித் ஷா பாஜக நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அதிமுக கிட்ட பாஜக கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி முக்கியமான ஆலோசனை நடந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில இருக்கிற பிரபலமான கோயில் நகரங்களை உள்ளடக்கின தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து வாங்கணும்னு அமித் ஷா தமிழக பாஜகவிற்கு உத்தரவு போட்டிருக்கார்.
அமித் ஷா உடன் நடந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரபலமான 16 கோயில்களை உள்ளடக்கிய பட்டியலை தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலை பாஜகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததோடு, இவை அனைத்தும் அமித் ஷா விருப்பப்படும் தொகுதிகள் என்ற பின்குறிப்பையும் சொல்லியிருக்காங்க. அந்த லிஸ்டில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 16 தொகுதிகள் இருந்துள்ளன.
இதையும் படிங்க: ஆயிரம் பேர்ல 600 பேர் திமுக தான்... இபிஎஸ்-க்கு அமைச்சர் முத்துசாமி தக்க பதிலடி..!
இதனைப் பார்த்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செம்ம ஷாக் ஆகிவிட்டாராம். ஏனெனில் அதில் நிறைய தொகுதிகள் அதிமுக செல்வாக்கு செலுத்தக்கூடிய தொகுதிகளாம். இதனால் பாஜகவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அதிமுக தலைமை விழி பிதுங்கி நிற்கிறார்களாம். இதேபோல அடுத்தடுத்து தொகுதி லிஸ்ட்டை கொடுத்து பாஜகவோட தொகுதிகளை உறுதி செஞ்சு முன்கூட்டியே தேர்தல் வேலையை தொடங்க சொல்லி இருக்காராம் அமித்ஷா.
இதையும் படிங்க: அதிமுகவினர் மீது போட்டாச்சு CASE! இனிமே ஆம்புலன்ஸ் டிரைவர் மேல கைய வெச்சா! எச்சரிக்கும் அரசு