×
 
☰

ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக அமைச்சர்கள் குழு அக்டோபர் 5-ம் தேதி கேரளா சென்று அம்மாநில முதலமைச்சர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள ஆனைமலையாறு–நல்லாறு திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த தமிழக அமைச்சர்கள் குழுவின் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதே பயணம் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உற்பத்தியாகும் ஆனைமலையாறு நீர் ஒரு பகுதி வீணாக அரபிக்கடலில் கலப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீரை நல்லாறு வழியாகத் திருப்பி தமிழகத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொங்கு மண்டலத்தில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: எலெக்சன் ரிசல்ட் வரட்டும்! அப்புறம் இருக்கு கச்சேரி! அமைச்சர்கள் செயல்பாட்டால் முதல்வர் விஜய் அதிருப்தி!

பல ஆண்டுகளாக ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசு சார்பில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக அமைச்சர்கள் குழு அக்டோபர் 5-ம் தேதி கேரளா சென்று அம்மாநில முதலமைச்சர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த குழுவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள அரசுடன் திட்டம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதே பயணத்தின் நோக்கமாக இருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை காரணமாகக் கொண்டு இந்த பயணம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஆனைமலையாறு–நல்லாறு திட்டம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது. பயணத்திற்கான புதிய தேதி இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: வடலூரில் வள்ளலார் 204-வது அவதார திருநாள் தொடங்கியது! சன்மார்க்கக் கொடியேற்றத்தால் களைகட்டிய விழா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share