தப்பு செஞ்சா சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கணும்! அதான் சரி! அன்பில் மகேஷ் கைது! அண்ணாமலை வரவேற்பு!
கடந்த 2023ஆம் ஆண்டு நாங்கள் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது, தமிழகத்தில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரணைக்குப் பின் நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கைக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நாங்கள் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது, தமிழகத்தில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல்?! அத்வானிக்கு குறிவைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் சலுகை ஏன்?!
அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை. முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. மகேஷ் தொடர்பான உதயநிதி பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்றுவரை பதில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அண்ணாமலை தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்லாத விஜய்? பழனிசாமிக்கும் நெருக்கடி! உளவுத்துறை எச்சரிக்கை!