குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!
பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேசிய ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை, ராகுல் பேசியதற்கும் தொடர்பில்லாமல் தன் மனதில் தோன்றியதை அடித்து விட்டார். இன்றுதான் ராகுலுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கிறது போலும். செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்துக்கு அழைக்காதீர்கள் என்று ராகுல் உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.
இன்று காலை செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் வருமான வரித்துறை இதை முழுப் பொய் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தன்னை முடக்கி வைத்ததாகக் கூறிய அதே செல்வப்பெருந்தகை, பின்னர் வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதும் பொய்யை உறுதிப்படுத்தியுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிரான கோவம் வெளிப்பட துவங்கியுள்ளது!! தென் தமிழகம், டெல்டா, கொங்கு பகுதியில் வெற்றி உறுதி - அண்ணாமலை!
“பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை” என்று அண்ணாமலை கிண்டல் செய்தார். ஒரு மாநில முதலமைச்சர் அடிப்படை உண்மைகளைக்கூட சரிபார்க்காமல் வடக்கு-தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
“இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று நினைத்தால் இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்லும்?” என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக தாக்கினார்.
தேர்தல் பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையின் மறுப்பு அறிக்கைக்குப் பிறகும், செல்வப்பெருந்தகை தரப்பில் இதுவரை மேலும் எந்த விளக்கமும் வரவில்லை. இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!