கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!
கோவையில் திமுகவை அனைத்து தொகுதிகளிலும் திமுகவினரே தோற்கடிப்பார்கள் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் தி.மு.க.வை தி.மு.க.வினரே தோற்கடிப்பார்கள் என்று தமிழக பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை, “இன்று முதல் தேர்தல் முடியும் வரை தினமும் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் சரியான தரவுகள் இல்லாமல் மக்கள் மன்றத்தில் பேசுகின்றனர். மக்கள் யோசித்து ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி” என்றார்.
அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை! அண்ணாமலை ட்விஸ்ட்! கடிதத்தில் சொன்ன பகீர் தகவலால் அதிர்ச்சி!!
கோவை தெற்கு தொகுதியில் செந்தில்பாலாஜியை வேட்பாளராக அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “கரூரில் இருந்து 18 பேர் கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு பாஸ் கொடுத்து, பூத் ஏஜெண்ட் நியமிக்கவும், இலவச பொருட்கள் கொடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது அமாவாசை காலத்து டெக்னிக். கரூரைச் சேர்ந்தவர்களை கோவை தெற்கில் இறக்கி விட்டுள்ளனர். இலவசம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.
தான் பா.ஜ. தேசியத் தலைவர் நிதின் நட்டாவுக்கு எழுதிய கடிதம் பொய் என்று கூறிய அண்ணாமலை, “நான் கடிதம் எழுதவில்லை. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கட்சியிடம் வேண்டுகோள் வைத்தேன். அதை தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது. நான் பிரசாரம் செய்வேன். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் இணைந்து வேலை செய்வோம். எனது அரசியல் தொடரும். இதில் மாற்றமில்லை” என்றார்.
மேலும், “கோவையில் தி.மு.க.வினரே செந்தில்பாலாஜியை தோற்கடிப்பார்கள். செந்தில்பாலாஜி தான் மட்டுமே அமைச்சர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவரும் தோற்பார். கோவை தி.மு.க.வினரை நம்ப முடியாததால் கரூரில் இருந்து வேட்பாளரை அனுப்பியுள்ளனர். மானமுள்ள தி.மு.க.வினர் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று விளாசினார்.
ஏப்ரல் 15ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் கோவை வர உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!