×
 

அண்ணா பல்கலை.யில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... பேராசிரியரால் மாணவிக்கு பாலியல் தொல்லை..! கொந்தளித்த அண்ணாமலை..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகாருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார் என்றும் மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: வானதியால் வந்த வினை... அண்ணாமலையை அம்போன்னு விட்ட பாஜக... தலைமைக்கு பறந்த பகீர் கடிதம்...!

கல்வி கற்க வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை என்றும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் பாலியல் சீண்டலுக்கு உள்ளானவர், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உங்கள் துணிச்சலே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: திருவண்ணாமலை கோவிலில் பாஜக பிரமுகர் அண்ணாமலை சாமி தரிசனம்... மனமுருகி வழிபாடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share