×
 

மு.க.ஸ்டாலின் Vs கனிமொழி!! இரண்டாக பிரியும் திமுக?! கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

தேர்தலில் தி.மு.க., தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என பிரியும். யாரிடம் தி.மு.க., செல்லும் என்று யாருக்குமே தெரியாது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை. தி.மு.க. தேர்தலில் தோற்றுவிட்டால், கனிமொழி தனி கட்சி தொடங்குவார், முக. ஸ்டாலின் தனி கட்சியாக நிற்குவார் என்று அவர் தெரிவித்தார். “யாரிடம் தி.மு.க. செல்லும் என யாருக்கும் தெரியாது” என்று அண்ணாமலை கூறினார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். “அமைச்சர் காந்தியின் வேட்டி-சேலை ஊழல், 160 கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். பாஜக அலுவலகத்துக்கு வந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. என்னை விசாரித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என்றார். “ஆட்சி மாறியதும் புழல் சிறையில் அவர்களுக்கு தனி பிளாக் கட்டப்படும்” என்று எச்சரித்தார்.

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல். முருகனை இழுத்துப் பேசுவது “வன்மத்தின் உச்சகட்டம்” என்றும் அண்ணாமலை விமர்சித்தார். செந்தில் பாலாஜி கனிமொழியிடம் சேருவதா அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

காங்கேயத்தில் முன்தினம் பிரசாரம் செய்தபோது அண்ணாமலை பேசியதாவது: “கடந்த ஐந்தாண்டுகளில் 8,000 கொலைகள், 31,900 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. கனிமொழியின் பிரச்சனை என்னவென்றால், கனவில் வருவதை கூட உண்மை என்று நினைத்து மைக்கில் பேசுகிறார்” என்றார். 

வளைகுடா போர் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பு வராமல் மோடி அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் தி.மு.க.வினருக்கு பொது அறிவு மிகவும் குறைவு என்றும் சாடினார். “எடப்பாடி பழனிசாமியை திட்டுவதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க.வுக்குள் உள்ள உள் பூசல் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இணையத்தில் லீக்கான ஜனநாயகன்! தொண்டர்கள் அதிர்ச்சி! விஜய்க்கு சாதகமா? பாதகமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share