×
 

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! எச்சரிக்கிறேன்!! மீஞ்சூர் சம்பவம்! திமுக அரசுக்கு அண்ணாமலை வார்னிங்!

மீஞ்சூர் மாணவியை இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்துக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கி, பின்னர் அரிவாளால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “மீஞ்சூர் அருகே வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை கஞ்சா போதையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளது. மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் அவலம் இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போதைப் பொருள் புழக்கம் பெருகியுள்ளது. வீட்டுக்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. 
மாணவியைத் தாக்கிய மூன்று பேரில் ஒருவரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!

போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்குத் தெரியாதா? தி.மு.க. அதிகாரமட்டம் காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவுதான் இது” என்றார்.

“தி.மு.க.வினர் பணம் சம்பாதிக்க போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் இந்த ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது” என்று அண்ணாமலை எச்சரித்தார்.

மேலும், “தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கத்தில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு பொதுமக்களைத் தள்ள வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.

இந்தக் கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய மகன்கள்! கோவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share