தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்! கல்லூரி மாணவிக்கு கஞ்சா கும்பல் தொல்லை! இபிஎஸ் கொந்தளிப்பு!
தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும். ன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும் என இபிஎஸ் விமர்சித்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கி, பின்னர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு போராடி வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், “இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் நிகழும்!! உரிய நீதி கிடைக்கும்! விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு நயினார் நாகேந்திரன் உறுதி!
மேலும் அவர், “கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி – இதுதான் தி.மு.க. ஆட்சிக்காலம்! படிக்கும் கனவுகளோடு இருந்த ஒரு மாணவியை ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் மீண்டும் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
“தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பற்றி ஒரு வார்த்தை கூட பேசினாரா? தன் ஆட்சிக்கு எந்தப் பொறுப்பும் இல்லாத, என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு ‘டம்மி’ முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, “ஏப்ரல் 23 அன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஒரே கேள்வி – தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், தி.மு.க. வீழ்ந்தே ஆக வேண்டும்!” என்று வலியுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்… pic.twitter.com/8mNuIWEjb9
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 15, 2026
இந்தக் கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து தி.மு.க. ஆட்சியில் கேள்வி எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு, வீடாக ரூ.8000 இல்லதரசி கூப்பன் விநியோகம்! திமுகவுக்கு தேர்தல் கமிஷன் கடும் கண்டிப்பு!