ஆ.ராசா பேசியது அத்தனையும் உண்மை!! ஆடியோ லீக் விவகாரம்!! கொளுத்தி போடும் அண்ணாமலை!
நீலகிரி எம்.பி., ராஜா, அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி எம்.பி. ஆ.ராஜா தொடர்பான சர்ச்சை ஆடியோ. அந்த ஆடியோவில் ராஜா பேசிய கருத்துகள் முற்றிலும் உண்மை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊட்டியில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுகவின் உள் பிரச்னைகளை இந்த ஆடியோ வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அரசியல் அறிந்த அனைவருக்கும் இது தெரியும் என்றும் வலியுறுத்தினார்.
அண்ணாமலை கூறியதாவது: “நாம் கூட்டணியாக ஒற்றுமையுடன் ஒரே அணியில் நிற்கிறோம். தமிழக வெற்றிக் கழகமும், சீமானும் களத்தில் உள்ளனர். ஆனால் போட்டி இருமுனைப் போட்டியாகவே உள்ளது. ஒருபுறம் ஆளும் திமுக, மறுபுறம் மீண்டும் ஆட்சிக்கு வரும் அதிமுக தலைமையிலான தேமுதிக கூட்டணி.
முதல்வர் ஸ்டாலின் தவறான நோக்கத்துடன் பேசுகிறார். உதாரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்து சொன்னால், அதை கனிமொழி திரித்து ‘மலர்வளையம் வைக்கும் குடும்பம்’ என்கிறார். இது மிரட்டல் இல்லையா? இபிஎஸ் பேச்சை கருத்தாக எடுத்துக்கொண்டு பதில் சொல்லுங்கள். ஆனால் உதயநிதி இபிஎஸ் பற்றி பேசும் விதம் தரக்குறைவானதும் ஆபாசமானதும் ஆகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!
முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் திரித்து பேசுகிறார். யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில், 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு என்ன மாற்றம் கொண்டு வந்தோம் என்பதைப் பற்றி பேச வேண்டும். அதற்கு பதிலாக ‘மண்ணில் புதைக்கிறார்கள், அங்கு புதைக்கிறார்கள்’ என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் ராஜா, இதுவரை திமுக கூட்டங்களில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை. நீலகிரி எம்.பி. ராஜா ஆடியோ வெளியான பிறகு திமுக தலைவர்கள் மறுத்தாலும், அது ராஜா பேசிய ஆடியோதான். அதில் அவர் பேசியது முழுக்க உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் இது தெரியும். தொகுதி எம்.பி.யாக இருந்தும் பிரசாரத்துக்கு கூட அவரை வரவிடாமல் முடக்கி வைத்துள்ளனர்.
ராஜா பேசிய கருத்துகளை தமிழக மக்கள் இப்போது தெரிந்து கொண்டுள்ளனர். அவர் முதல்வரின் திறனைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். திமுகவின் மூத்த தலைவரே நாங்கள் தொடர்ந்து சொல்வதை ஊர்ஜிதம் செய்துள்ளார். இது தேர்தல் நேரத்தில் எங்கள் பிரசாரத்துக்கு பெரும் வலு சேர்த்துள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த ஆடியோ சர்ச்சை அரசியல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் நேருவால் வந்த பிரச்னை! கழட்டிவிடும் நிர்வாகிகள்! ம.ம.க. வேட்பாளருக்கு பெரும் சிக்கல்!