×
 

ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, ஆந்திராவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சராக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

அண்ணாமலை (K. Annamalai) மீண்டும் தேசிய அரசியலின் மையமாக மாறியுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்து விலகிய பிறகு அரசியல் ரீதியாக அமைதியாக இருந்த அண்ணாமலை, தற்போது ஆந்திரப் பிரதேசம் வழியாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என்ற தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் 21 மற்றும் ஜூலை 19 தேதிகளில் ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாகும் 24 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் காலியாகும் 4 இடங்களில் ஒன்றை பாஜகவுக்கு ஒதுக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக இணைந்த கூட்டணியில், அந்த இடத்தில் அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என டெல்லி மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் தீவிர அரசியல் செயற்பாட்டின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற அண்ணாமலையை, நேரடியாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடந்தால், அண்ணாமலைக்கு முக்கிய துறை கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய்யின் தவெகவுக்கு தாவும் பாஜக இளைஞர்கள்! கட்சியை காக்க மீண்டும் தலைமை ஏற்கிறார் அண்ணாமலை?!

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்தபின்,  நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு தேசிய அரசியலில் பெரிய பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா (Amit Shah) முன்பே குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. மேலும், தனிக் கட்சி தொடங்குவார், விவசாயத்தில் கவனம் செலுத்துவார், பால் பண்ணை தொடங்குவார் என்ற பல்வேறு தகவல்களும் வெளியாகின. ஆனால் தற்போது, அவரை தேசிய அரசியலுக்கு அழைக்கும் வகையில் ராஜ்யசபா வாய்ப்பு உருவாகியிருப்பது தமிழக பாஜகவிலும் புதிய அரசியல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றம்... அண்ணாமலைக்கு காத்திருக்கும் டபுள் ஜாக்பாட்... அமித் ஷா எடுத்த முக்கிய முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share