×
 

'WE THE LEADERS' அமைப்பின் முதல் மாநாடு! அண்ணாமலை அரசியல் வியூகம்! பொள்ளாச்சியில் குவியும் கூட்டம்!

'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடக்கிறது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.

பா.ஜ.க.வில் இருந்து விலகி 'WE THE LEADERS' என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலையின் முதல் பெரிய மாநாடு இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெறுகிறது. 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் அவர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன. புதிய அமைப்பின் எதிர்கால செயல்திட்டம், வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாநாட்டுக்காக ஆச்சிப்பட்டியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அரங்கிற்கு வெளியிலும் பொதுமக்கள் நிகழ்ச்சியை காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!

மேலும், பொள்ளாச்சியின் அடையாளங்களான தென்னை மரங்கள் மற்றும் ஆழியாறு அணையை மையமாகக் கொண்டு மாநாட்டு முகப்பு வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாலை நடைபெறும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது.

மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலை தரப்பினர், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாகவும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் அண்ணாமலை தனது கருத்துகளை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசியல் பயணத்தின் முதல் மாநாட்டில் அவர் வெளியிடும் அறிவிப்புகள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசியல் HOTSPOT..! WE THE LEADERS அமைப்பின் முதல் மாநாடு... பணிகள் மும்முரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share