×
 

திமுக ஆட்சியை தீயில் கரைத்து.!!! போகியோடு அனுப்பிச்சிருங்க!! அண்ணாமலை வாழ்த்தால் சர்ச்சை!

குடும்ப நலனுக்காக தமிழக வளங்களை சுரண்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்பட வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

போகி பண்டிகை என்பது தீயவற்றை எரித்து அகற்றி, புதிய நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்கும் மகிழ்ச்சியான திருநாள். இந்த பண்டிகை நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை. ஆனால் அதே சமயத்தில் தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் இன்று மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறது என்று அண்ணாமலை தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல், ஒவ்வொரு மழைக்காலத்திலும் அவர்களை தவிக்க வைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர்களின் அரசுப் பணி கனவுகள் தி.மு.க.வின் லஞ்ச லாவண்யத்தால் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், கனிம வளக் கடத்தலுக்கு துணை போக மறுக்கும் நேர்மையான அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதாகவும் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை இன்று போராட்டமாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை தனி ஆளில்ல!! தமிழ் தேசியத்தின் மகன்!! தாக்கரே சகோதரர்கள் மிரட்டலுக்கு சீமான் பதிலடி!!

தி.மு.க.வின் ஊழல் ஆட்சியால் தமிழக மக்களின் வாழ்க்கை முழுவதும் சுமையாக மாற்றப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஊழலும் குடும்ப அரசியலும் பெருகி, தமிழகம் முழுவதும் இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே தமிழகத்தின் வளங்களை சுரண்டி வருவதாக தி.மு.க. அரசை குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, “இந்த போகி பண்டிகையோடு தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலை “ஊழல் தி.மு.க. ஆட்சியை அரசியல் தீயில் கரைத்து, தமிழகத்திற்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் மற்றொரு போகி பண்டிகையாக” மாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போகி பண்டிகை போன்ற மகிழ்ச்சியான, பாரம்பரிய நாளில் இவ்வாறு கடுமையான அரசியல் தாக்குதலை நடத்தியுள்ளது அண்ணாமலையின் அணுகுமுறையை மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்... கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..! வலுக்கும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share