செப்.14!! நாள் குறித்தார் அண்ணாமலை!! அரசியல் கட்சியாக உருவெடுக்கும் We The Leaders!
அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கத்தில் பதிவு செய்து இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்துள்ளது. வரும் செப்டம்பர் 14ல், இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'We The Leaders' (இது நம்ம இயக்கம்) இயக்கத்தில் ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இணைந்துள்ளனர்.
ஜூன் 5-ம் தேதி அண்ணாமலை தனது புதிய அரசியல் பயணத்தை அறிவித்தார். பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட நிலையில், "புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பார்வையோடு தொடங்க வேண்டும்" என்கிற ஆசையுடன் அவர் இந்த இயக்கத்தை தொடங்கினார்.
வரும் செப்டம்பர் 14-ம் தேதி இந்த இயக்கத்தை முழு அரசியல் கட்சியாக அறிவிக்கவும், தமிழகத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் அண்ணாமலை தெளிவாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இயக்கம் துவங்கிய முதல் நாளிலேயே 10 லட்சம் பேர் ஆதரவு!! 13 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை! அண்ணாமலை பாய்ச்சல்!
இயக்க உறுப்பினர் சேர்க்கை ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இணைந்தனர். இரவு 7 மணி நிலவரப்படி எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது.
இன்று காலை 5.50 மணி நிலவரப்படி 11 லட்சத்து 21 ஆயிரத்து 550 பேர் பதிவு செய்திருந்தனர். காலை 9 மணிக்குள் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த வேகம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கு இப்போது தெளிவாகத் தெரிகிறது. இளைஞர்கள் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். தமிழக மக்களிடம் தனக்கு இருக்கும் ஆதரவை உணர்ந்து கொண்ட அண்ணாமலை, இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளார்.
மக்களின் அன்றாட பிரச்சனைகளை நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் இந்த இயக்கம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக எளிதாக உறுப்பினராகும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் இணைவது அண்ணாமலையின் துணிச்சலான அணுகுமுறைக்கு மக்கள் தரும் பெரும் வரவேற்பாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றக்கூடிய ஒரு புதிய சக்தியாக 'We The Leaders' உருவெடுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அண்ணாமலையின் அடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை நோக்கி தமிழகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: கூண்டோடு விலகல்... நயினார் தலையில் இறங்கியது பேரிடி... கோட்டையை கோட்டை விட்ட தமிழக பாஜக...!