அம்மா ஷோபாவை வைத்து விஜய்க்கு பாஜக கட்டிய வலை... அமித் ஷாவின் ப்ளானை புட்டு புட்டு வைத்த அப்பாவு...!
விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மையின வாக்குகளை பிரிப்பதற்காக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட டவுன் தனியார் திருமண மண்டபத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழக சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வகாப் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மாநகர பகுதியில் 13 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆயிரக்கணக்கில் குவிந்த பொதுமக்களிடம் இருந்து அவர்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இந்த முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாநகரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கள் பிரச்சனைகளை விண்ணப்பங்களாக எழுதி வந்து கொடுத்தனர்.
அதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் பேசிய அப்பாவு: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் நடத்திட முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாமில் பங்கேற்று மனு கொடுக்கும் மக்களுக்கு 45 நாட்களுக்கு தீர்வு வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் 255 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற இருக்கிறது. இன்று தொடங்கி வெள்ளி வரை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 1295 தன்னார்வலர்கள் இந்த முகாமுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் போல ஒரு ஆளுநர் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. தமிழக ஆளுநர் தமிழக சுகாதார துறையை பாராட்டி உண்மையை சொல்லியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். காவிக்கு பின்னால் இந்த முதல்வர் மறைவதற்கு அவசியம் இல்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதைய அரசு தயங்கியது. ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பாஜகவின் சி டீம் ஆன விஜய், வயிறெரியும் எடப்பாடி பழனிசாமி - போட்டுத்தாக்கிய அமைச்சர் ரகுபதி..!
விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சரியா தவறா என்பதை இதுவரை தெரியவில்லை. அந்த சோதனை நடந்த போதே பாண்டிச்சேரியை சேர்ந்த பூசி ஆனந்த் நேரில் சென்று அமித்ஷாவிடம் பேசி அதனை சரி செய்து வைத்தார். வருமான வரி சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜ்க்கு பதவி வழங்கப்படுகின்றது. பாஜக அமித்ஷா விஜய் பின்னால் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பட்டு வருகிறது.
விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மையின வாக்குகளை பிரிப்பதற்காக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: SORRY வேண்டாம் நீதி வேண்டும்!! விஜய் தலைமையில் போராட்டம்.. குவியும் தொண்டர்கள்..!