×
 

“தமிழக வெட்டிக் கழகம்”... விஜயைச் சீண்டிய அர்ஜுன் சம்பத்... திமுகவின் பி டீம் என கிண்டல்...!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திமுக வின் A டீம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த முதல்வர்களில் சிறப்பாக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து பேசிய அர்ஜுன் சம்பத் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு தேர்தல்களிலும் ஓட்டுகளை பிரிப்பதற்காக திமுக புதுப்புது நடிகர்களை அரசியலுக்கு கொண்டு வருவார்கள். அதே போன்று தற்போது விஜய்யை திமுக கொண்டு வந்துள்ளது விஜய் திமுகவின் A - டீம். விஜய் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல, அது முழுக்க முழுக்க ரசிகர்களின் கூட்டம். ரசிகர்களின் நலனில் அக்கறை காட்டாதவர் விஜய் . அது தமிழகம் வெற்றிக்கழகம் அல்ல தமிழக வெட்டிக்கழகம் என விமர்சித்தார்.

இதையும் படிங்க: அணில் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது - விஜயை மீண்டும் சீண்டிய சீமான்...!

 அதிமுக பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இடம் பெற்றால் நீங்கள் அதில் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக தொடர்வோம், அப்போது நாங்கள் கொள்கைகளை பார்க்க மாட்டோம். எதிரிகளை வீழ்த்துவது மட்டுமே எங்கள் நோக்கம் என மாற்றி மாற்றி பேசினார். அனைத்து பட்டியலின மக்களுக்கும் செய்யக்கூடிய துரோகங்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார் திருமாவளவன். மேலும் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: “விஜய்க்கு இந்துக்கள் ஓட்டுத் தேவையில்லை” - தவெகவிற்கு ஷாக் கொடுத்த ஹெச்.ராஜா...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share